Home செய்திகள் சிக்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் சுற்று வட்டார விளையாட்டு போட்டி..

சிக்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் சுற்று வட்டார விளையாட்டு போட்டி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் சுற்று வட்டார விளையாட்டு போட்டி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “நான் மலேசிய நாட்டில் பொருளாதாரம் ஈட்டி தமிழகத்தில் பொறியியல் கல்லூரி உருவாக்கியுள்ளேன், நான் குறைந்த அளவு படித்துள்ளேன், மாணவ மாணவிகள் விளையாட்டில் ஆர்வமாக கலந்து கொண்டு ஒலிம்பிக் மற்றும் உலக அளவில் தங்க மெடல் வாங்கி குவிக்க வேண்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், இப்பள்ளியின் கோரிக்கையான மாணவ மாணவிகளுக்கு குடிதண்ணீர் வசதி உட்காருவதற்கு மாணவர் இருக்கை, எழுதுவதற்கு டெஸ்க்  எனது எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து கூடிய விரைவில் வழங்குவேன். மேலும் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிக்கல் கண்மாய் விவசாய சங்கத் தலைவர் பாக்கியநாதன் உரையாற்றுகையில், “இப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறப்பு பொருளாதார வேளாண்மை மண்டலமாக அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இதனால் தானியங்கள் விளைந்து அரண்மனையில் சேமித்து வைக்கப்பட்டன. 250 கிராமத்திற்கு மையப்பகுதி சிக்கல் மூன்று போக விளைச்சல் நடைபெற்று. 25 வகை நெல் விளைந்தன, தற்போது 3 அல்லது 4 வகைதான் விளைச்சல் நடைபெற்று வருகிறது. நீராதாரங்கள் குறைந்து விட்டன பின்னர் அவை தடைபட்டு மக்கள் ஆட்சி வந்தபிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 110 விதியின் கீழ் இப்பகுதியை கடலாடி ஊராட்சி சிக்கல் ஊராட்சி என்று பிரித்தார். ஆனால் அவை நடைமுறைக்கு வரவில்லை சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பகுதி எம்எல்ஏ மலேசியா பாண்டியன் இவற்றை தெரிவித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!