Home செய்திகள் கீழக்கரையில் அடாவடி பாரத (SBI) வங்கி மேலாளர்.. வெதும்பும் பொதுமக்கள்.. வேதனையில் சமூக ஆர்வலர்கள்…விரைவில் காவல்துறையில் புகார்..

கீழக்கரையில் அடாவடி பாரத (SBI) வங்கி மேலாளர்.. வெதும்பும் பொதுமக்கள்.. வேதனையில் சமூக ஆர்வலர்கள்…விரைவில் காவல்துறையில் புகார்..

by ஆசிரியர்

கீழக்கரையில் மிகவும் பழமையான வங்கிகளில் ஒன்று பாரத வங்கி (SBI).  மக்களை எவ்வளவு இழிவு படுத்தினாலும், அரசாங்க வங்கி என்றே ஓரே எண்ணத்தில் பொதுமக்கள் அங்கு தொடர் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். சமீப காலத்தில் பல தனியார் வங்கிகள் நல்ல சேவையை தொடங்கியதன் காரணமாக பல வாடிக்கையாளர்கள் மாறினாலும், பாரத வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களின் நடவடிக்கை மற்றும் மாறவேயில்லை, நாளுக்கு நாள் மோசமான வண்ணமே உள்ளது.

இதற்கு உதாரணம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளாராக மாணிக்கம் என்பவர் மாறுதலாக சென்ற பின் அதே வங்கியில்  அக்கவுண்டண்ட் ஆக இருந்த வசந்த குமார் என்பவர் மேலாளர் பதயி உயர்வு பெற்றது. ஆனால் இவர் மேலாளர் ஆன பிறகு இவ வங்கியின் சேவை முன்னேறும் என நினைத்த மக்களுக்கு பெரும். ஏமாற்றமே மிஞ்சியது.  மேலாளரின் அடாவடி போக்கு அதிகாகியே உள்ளது.  சமீபத்தில் ஸ்காலர்ஷிப் வேண்டி படிக்கும் மாணவ,  மாணவியர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வருபவர்களையும் அலைகழிப்பு செய்து வருகிறார் என பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது  விசயமாக பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர் கூறுகையில், “வங்கியில் கணக்கு தொடங்க பல வகையான ஆவணங்கள் கேட்டார், அதையெல்லாம் கொடுத்த பின்பு, தந்ததும் தாலூகா ஆபீஸ் சென்று கைரேகை வாங்கி வருமாறு கூறுகிறார். எங்களுக்கும் ஒன்றும் புரியாமல் தாலூகா ஆபீஸ் சென்றால் அதுதான் ஆதார் கார்டு உள்ளதே,  என்கின்றனர். விபரம் தெரிந்த ஒருலரை அழைத்து சென்று மேனேஜரிடம் ஏன் சார் குழந்தையின் கைரேகை அப்டேட் ஆகவில்லையா ? என கேட்டதற்கு அதெல்லாம் தெரியாது தாலூகா ஆபீஸ்  செல்லுங்கள் என மீண்டும் சொன்னதையே மனநலம் பாதிப்புக்குள்ளானவர் போல் சொல்கிறார்” என வேதனையுடன் கூறி முடித்தனர்.

பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடக்கும் இந்த கிளையில் ஒரு மேலாளராக இருக்க எந்த தன்மையும், தகுதியும் இல்லாத ஒரு நபரை எவ்வாறு இந்த வங்கு நியமித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் இவ்வங்கி மேலாளரின் அடாவடி தனத்தை மக்கள் டீம் ஒருங்கிணைப்பாளர் காதர் இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார், அதற்கு பொதுமக்களிடம் இருந்து அம்மேலாளர் மீது கடுமையான கருத்துக்கள் எழும்பியது, அதைத் தொடர்ந்து அம்மேலாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட உள்ளது என அறியப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!