சவூதி அரேபியா ரியாத் நகரில் வீசும் கடுமையான தூசிக் காற்று, கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சவதி அரேபிய தலைநகரம் ரியாத் இன்று 14.03.17 அதிகாலை முதலே கடுமையான அடர்ந்த தூசிக் காற்றால் சூழ்ந்து காணப்பட்டது.

ரியாத் நகரம் ஒவ்வொரு வருடமும் பருவநிலை மாறும் பொழுது தூசிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பருவ மாற்றத்தினால் விமான போக்குவரத்தும் இரண்டு வார காலம் கடுமையாக பாதிக்கப்பட்டது குறப்பிடதக்கது.

இந்ந வருடமும் பருவ மாற்றம் அடர்த்தியான தூசி காற்று மற்றும் மழையுடன் தொடங்கியுள்ளது. இதனால் காலையில் பள்ளி மற்றும் அலுவலகத்துக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும் வானிலை மையமும் இந்த பருவமாற்றத்தை கருத்தில் கொண்டு வெளியில் செல்பவர்கள் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுருத்தியுள்ளார்கள்.