கீழக்கரை சதக் கல்லூரிகள் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக “மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி” முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அ.அலாவூதீன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் இவர்களுடன் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் டாக்டர்.ஜெ.அப்பாஸ் மைதீன், டீன் ஜெ.முகம்மது ஜஹபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.இ.ரஜபுதீன் மற்றும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி, காங்கிரஸ் தலைவர் திரு.ரவிசந்திர ராமவன்னி, முன்னாள் நகரசபை தலைவர் ராவியத்துல் காதரியா ரிஸ்வான், முன்னாள் ஆணையாளர் மருது, ஜமாத் தலைவர்கள் ரோட்டரி கிளப் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் மற்றும் கல்லூரியின் துறைதலைவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஜும்மா பள்ளித் துணைதலைவர் அய்யுபுகான் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் துணைமுதல்வர் அ.சேக்தாவுத், ஆசிரியர் என்.ஜாகிர் உசேன், உடற்கல்வி இயக்குநர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.