Home செய்திகள்உலக செய்திகள் சங்கரன்கோவிலில் புதிய தீயணைப்பு நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

சங்கரன்கோவிலில் புதிய தீயணைப்பு நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

by Abubakker Sithik

சங்கரன்கோவில் பகுதியில் புதிய தீயணைப்பு மீட்பு பணி நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் பிப்.17 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தை திறந்து வைத்துள்ளார். இதற்கு முன்னர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக உருவான தென்காசி மாவட்டத்திற்கென தனி கவனம் செலுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தென்காசி மாவட்டத்தில் பல புதிய அலுவலக கட்டடங்களை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைத்துள்ளார். பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் பானுபிரியா, உதவி தீயணைப்புத்துறை அலுவலர் சுரேஷ் ஆனந்த், சங்கரன் கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன், உதவி செயற் பொறியாளர் (தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம்) சசிநாதன், உதவி பொறியாளர்கள் சரவணன், சிவா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!