மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பூச்சிபட்டி கிராமம்.இங்கு உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் சில ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகின்றது.இவற்றை நிரப்ப வலியுறுத்தி அரசிடம. பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆவேசமடைந்த கிராமமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து பூச்சிபட்டி பள்ளி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.தகவலறிந்த உசிலம்பட்டி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அரசிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை மோகன் 45
You must be logged in to post a comment.