Home செய்திகள் சதுரகிரி மலையில்தண்ணீர் தட்டுப்பாடு :ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடை

சதுரகிரி மலையில்தண்ணீர் தட்டுப்பாடு :ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடை

by mohan

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயர சதுரகிரி மலையில் உள்ள, சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை விழா, வரும் 31 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதிமுதல், ஆகஸ்ட் 1 ஆம் தேதிவரை, 6 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால், மலைப்பகுதியில் முடிகாணிக்கைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அடிவாரப் பகுதியிலேயே, முடி காணிக்கை செலுத்திவிட்டு கோயிலுக்கு வருமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெ.அஸ்கர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!