![IMG-20170311-WA0103[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170311-WA01031.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரையில் இன்று 11.03.17 கிழக்கு தெரு தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி, வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி, மேலத் தெரு ஹமீதியா பெண்கள் மேனிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையினர், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுக்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரசு மருத்துவர்கள் டாக்டர் ராசிக்தீன், டாக்டர் சோஃபியா, மலேரியா கிளினிக் முதன்மை அதிகாரி செல்லக்கண்ணு முன்னிலையில் பெற்றோர்களுக்கு இந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளியின் மேலாண்மை நிர்வாக அதிகாரி முஹைதீன் அப்துல் காதர் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தார்.
You must be logged in to post a comment.