உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் கிகிச்சை முகாம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் சாலைபாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் மற்றும் லயன்ஸ் கிளப், மதுரை அகர்வால் கண் மருத்துவமணை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் கிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த இலவச கண்சிகிச்சை முகாமினை உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜா தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் கிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் காவல் துறையினர் மற்றும் உளவுத்துறை போலீசார் பலர் கலந்துகொண்டனர்.