கீழக்கரையில் திருமணத்திற்காக அடைக்கப்பட்ட பொது சாலை…

கீழக்கரையில் பொதுவாக திருமண வரவேற்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள் தெரு சாலைகளிலேயே நடைபெறும். அச்சமயங்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமலே நடைபெறும்.

கீழக்கரையில் டிசம்பர் மாதம் என்றாலே அதிகமான திருமணங்கள் நடைபெறும்.  இன்று கீழக்கரை முக்கிய தெருவில் நடைபெறும் திருமணத்திற்காக பொது மக்களும், வாகனங்களும் செல்லும் முக்கிய பாதையே அடைத்து வைத்து இடையூறு ஏற்படுத்தியிருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சாலையில் முக்கிய மருத்துவமனைகள் பல அமைந்துள்ளது. மேலும் இச்சாலையே வள்ளல் சீதக்காதி சாலைக்கு மாற்று சாலை என்பது குறிப்பிடத்தக்கது.