Home செய்திகள் திருவேடகம் -வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் தேடுதல்

திருவேடகம் -வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் தேடுதல்

by mohan

 வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் சோழவந்தான் அணைப்பட்டி போன்ற பகுதிகளில் இரு கரைகளைத் தொட்டு அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மதுரைமாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருந்தாலும் ஆர்வம் காரணமாக இளைஞர்களும் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் அதிகமான அளவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து வந்த நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற 21 வயது இளைஞர் குளிக்கும்போது நீரீல் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த சோழவந்தான் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் மாயமான இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் இளைஞர் பற்றிய தகவல் கிடைக்காததால் இன்று அதிகாலை முதல்சோழவந்தான் தீயணைப்பு நிலைய அதிகாரி தௌலத் பாதுஷா வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி வருவாய் ஆய்வாளர் கௌதமன் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் இளைஞரின் உடலை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இதில் தீயணைப்பு துறையினர் சுமார் 21 பேர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காணாமல் போன இளைஞரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் காவல்துறையுடன் இணைந்து உதவி செய்து வருகின்றனர். தற்போது வரை இளைஞரின் உடல் கிடைக்காததால் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் இளைஞர் கார்த்திக் உடன் ஆறு பேர் வந்ததாகவும் அதில் ஐந்து பேர் கரையில் உள்ளதாகவும் கார்த்திக் மட்டும் நீரில் மூழ்கி மாயமானதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com