Home செய்திகள் நகரவாசிகளுக்கு முன்மாதிரி கிராமம்..ஆடம்பரம்-வீண் செலவுகளுக்கு தடை..

நகரவாசிகளுக்கு முன்மாதிரி கிராமம்..ஆடம்பரம்-வீண் செலவுகளுக்கு தடை..

by ஆசிரியர்

மாறிவரும் நவீன காலத்திற்கேற்ப மனிதர்களின் பழக்கவழங்கங்களும் மாறி வருகின்றது. அனைவரும் ஆடம்பரத்தின் பின்னால் சென்று கொண்டுள்ளனர்.இவ்வாறில்லாமல் தனி நபர் மட்டுமல்லாமல் ஒரு கிராமமே தங்களுக்கு தாங்களே ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு சுய கட்டுப்பாட்டை விதித்து சத்தமில்லாமல் ஊர் கட்டுப்பாடாக்கி சாதித்துக் காட்டியுள்ளனர் கிராம மக்கள்.இதுபற்றிய விபரம் வருமாறு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி பஞ்சாயத்து.இந்த பஞ்சாயத்தில் நக்கலப்பட்டி மாதரை குஞ்சாம்பட்டி பெருமாள் கோவில்பட்டி பூச்சிபட்டி உள்பட 12 கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவற்றிற்கு தாய்க்கிரமமான நக்கலப்பட்டி கிராமத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடி தங்கள் கிராமத்தில் நீண்ட காலமாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். இதன்படி கிராமத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் வேட்டு வெடிக்க கிராமத்தில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் திருவிழாவின் போது வான வேடிக்கைக்கு மட்டும் அனுமதி உண்டு.மேலும் கிராமங்களில் சத்தமாக ஒலிபெருக்கி அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.விசேஷ நிகழ்ச்சியின் போது விசேஷ வீட்டார் வீடுகளில் மட்டும் மைக்செட் குறைந்த சத்தத்தில் வைக்க அனுமதி உண்டு.கூம்ப வடிவ ஒலிபெருக்கி தெரு முழுவதும் வைக்க அனுமதி இல்லை.கிராமத்தில் வயதானவர்கள் முதியவர்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

மேலும் கிராமத்தில் பெண்கள் சிறுவர்கள் வாசல் மற்றும் பொது வெளியை அதிகம் உபயோகப்படுத்துவதாலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதாலும் கிராமத்திற்குள் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் வேகமாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கிராமங்களில் யாரேனும் இறந்தால் அவர்களின் வீடுகளிலிருந்து மாயானம் செல்லும் வரை பிணத்துடன் ஆடிக்கொண்டு இறந்தவருக்கு அணிவித்த மாலையை சாலையின் இரு புறங்களிலும் வீசிக்கொண்டே செல்வர்.தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நக்கலப்பட்டி மந்தையிலிருந்து பொது மயானம் செல்லும் வரை மாலைகளை சாலைகளில் வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ரோட்டில் போட்ட மாலையினால் தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளதால் மற்றும் மாலைகளை தெருவில் வீசிவதால் ஏற்ப்படும் தேவைற்ற சாதிப் பிரசச்சனைகள் உருவாகுவதை தடுக்கலாம் என்பதால் இறுதி ஊர்வலத்தில் மாலைகளை தெருவில் வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி கிராமங்களில் ஆடம்பர மற்றும் சர்ச்சையை ஏற்ப்படுத்தும் விசயங்களுக்கு தடையை ஏற்ப்படுத்தியுள்ளனர் நக்கலப்பட்டி கிராமத்தினர்.உள்ளுர் மக்கள் மட்டுமல்லாமல் கிராமத்திற்கு வரும் வெளி நபர்களும் தங்கள் கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள ஏதுவாக கிராம மையப்பகுதியில் கட்டுப்பாடுகளை எழுதி போர்டாக வைத்து அதைக் கடைபிடித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!