Home செய்திகள் மறுவாக்குபதிவு.. 1405 வாக்குகள் கொண்ட வடுகபட்டி பூத்திற்கு பூத் எண் 197க்கு மட்டும் சுமார் 200போலீசார் குவிப்பா?

மறுவாக்குபதிவு.. 1405 வாக்குகள் கொண்ட வடுகபட்டி பூத்திற்கு பூத் எண் 197க்கு மட்டும் சுமார் 200போலீசார் குவிப்பா?

by ஆசிரியர்

மறுவாக்குபதிவு.. 1405 வாக்குகள் கொண்ட வடுகபட்டி பூத்திற்கு பூத் எண் 197க்கு மட்டும் சுமார் 200போலீசார் குவிப்பா? தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி சுமார் 100க்கும் மேற்பட்டோர் பறக்கும் படையினராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி “இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் 199 பெரியகுளம் (தனி) சட்டபேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் அஇஅதிமுக சார் பில் தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.ப.ரவிந்திரநாத் குமார் போட்டியிட்டார். அதே போல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிந்த சூழலில் கோவையில் இருந்து ஐம்பது வாக்குப்பெட்டிகள் தேனி தாலுகா அலுவலகம் வந்தடைந்தன. பல்வேறு அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குப்பெட்டி வந்ததற்கான காரணம் கேட்ட பிறகு தான் தெரிந்தது தேனியில் இரண்டு பூத்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறப் போகின்றது என்று.

அதுவரை மவுனம் காத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஈரோடு, தேனி உட்பட 39 பூத்களுக்கு மே மாதம் 19ம் தேதிமறு வாக்கு பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். தேனியை பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியினரும் மறுவாக்குபதிவு கோராத பட்சத்தில் மறுவாக்குப்பதிவு என்பது வேண்டாத ஒன்று என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியகுளம் வடுகபட்டி பூத் எண் 197ல் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 702 மற்றும் பெண் வாக்காளர்கள் 703 பேர் என மொத்தம் 1405 வாக்காளர்கள் உள்ளனர். 1405 வாக்காளர்கள் மறுபடியும் மறு வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். இவர்களில் நடந்து முடிந்த தேர்தலில் 450 ஆண்கள் மற்றும் 454 பெண்கள் என மொத்தம் 904 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறு வாக்குப் பதிவின் போது எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் 21 இடங்களில் போலிசார் சோதனை அமைத்துள்ளனர். வாக்காளர்கள் முழுமையாக பரிசோதித்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!