கீழக்கரையில் இருந்து ₹.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கேரளாவுக்கு கிளம்பியது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறான மக்களிடம் இருந்து கேரள மக்கள்  நிவாரணத்திற்காக பொருட்கள் பெறப்பட்டது.  அவ்வாறு பெறப்பட்ட பொருட்களின் மதிப்பு  கிட்டத்தட்ட  3 லட்சம் மதிப்புக்கு மேல் ஆகும்.

அவ்வாறு பெறப்பட்ட பொருட்களை கேரள மக்களுக்கு வழங்குவதற்க்காக கீழக்கரை வி.சி.க நகர் செயலாளர் ஹமீது யூசுப், அப்துல் மாலிக் சமூக சேவகர், தமுமுக ஒன்றிய செயலாளர் ஜியாவுல் உசேன், ஆகியோர் கொண்டு செல்கின்றனர். நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனத்தை MYFA சங்கத்தின் செயலாளர் எஸ்.எம்.பாதுஷா வழிஅனுப்பி வைத்தார்.