Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அருகே ரெட் கிராஸ் தின கொண்டாட்டம்…

இராமநாதபுரம் அருகே ரெட் கிராஸ் தின கொண்டாட்டம்…

by ஆசிரியர்

ரெட் கிராஸ் அமைப்பின் தந்தை 1901 ல் நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீன் ஹென்றி டுணான்ட் பிறந்த தினம் ( மே 8) உலக ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி  இராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டியன் தலைமையில் 50 தூய்மை காவலர்களுக்கு இனிப்புடன் காலை உணவு வழங்கப்பட்டது.

பெருங்குளம்  ரெட் கிராஸ் மருத்துவமனை வளாகத்தில் ஜேஆர்சி, ஒய்ஆர்சி ஆகியன சார்பில் மரக்கன்று நடப்பட்டது.  தாயகம் குழந்தைகள் இல்லத்திற்கு தொலைக்காட்சி வழங்கப்பட்டது. காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர் ஆகியோருக்கு கேக், குடிநீர் வழங்கப்பட்டது.

பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனை டாக்டர் எம். சுந்தரராஜ், ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன், பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்  தி. ஜீவா, ஆடிட்டர் ரமேஷ் பாபு, முனைவர் எம். தேவி உலகராஜ், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் எ.மலைக்கண்ணன், ராமேஸ்வரம் கிளை செயலர் எஸ்.திரவியசிங்கம், ஜுனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட கன்வீனர் எம். ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட கன்வீனர் எம். பாலமுருகன் ஒய்ஆர்சி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளிவிநாயகம் ராஜா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பாபு, ஆயுட்கால உறுப்பினர்கள் தினகரன் ஜி.பரமேஸ்வரன், எம் பழனிக்குமார், என். கார்த்தி, எல்.கருப்பசாமி, ஜே. முத்துகுமரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தயாநிதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை ரெட் கிராஸ  மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!