இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 12-வது வார்டில் தனியார் பள்ளியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒரு பக்கம் சுவர் கட்டி மறு பக்கம் சுவர் இல்லாததால் அருகேயுள்ள பள்ளி மாணவர்கள் அதை தாண்டிதான் வர வேண்டிய சூழல் உள்ளது.இப்படி ஒரு சூழலில் அதில் விழுந்து அடிபடும் நிலை உள்ளது.இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ நிர்வாகி ரிஸ்வான் கூறுகையில்,ஆர்.எஸ்.மங்கலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் இந்த சாலையை தான் பயண்படுத்துகிறார்கள்.இந்த சாலையில் அதிகப்படியான போக்குவரத்து உள்ளது.கொரொனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.தமிழக அரசின் கட்டுப்பாட்டல் கொரொனா குறைந்து பள்ளிகள் திறக்க உள்ள இந்த சூழலில் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு இந்த சாக்கடை பகுதியில் ஒரு புறம் சுவர் எழுப்பி அந்த கழிவுநீர் வாடை வெளியில் வீசாமல் இருக்க காண்கிரீட் சிலாப்புகள் போட்டு மூடி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்
43
You must be logged in to post a comment.