Home செய்திகள் பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை வழிகாட்டு நெறிமுறை காவல் துறை அறிவிப்பு

பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை வழிகாட்டு நெறிமுறை காவல் துறை அறிவிப்பு

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.28 முதல் 30 வரை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன்படி,கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டல் படி, அனுமதி பெற்று தேவர் ஜெயந்திக்கு வருவோர் முகக்கவசம், கையுறை அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனங்கள், வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள பதிவு பெற்ற அரசியல் தலைவர்கள் (5 பேர்), அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட அனுமதி விண்ணப்பங்களை பரீசிலித்து மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்படும் நேரப்பட்டியல் படி உரிய நேரத்தில் அஞ்சலி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாகனத்தின் மேற்கூரையில் பயணிக்கவோ, ஒலிப்பெருக்கி அமைத்து கொண்டோ, மேள தாளங்கள் இசைத்து கொண்டோ செல்ல அனுமதி இல்லை. வாகனத்தில் ஆயுதங்கள், கற்கள் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் எடுத்துச்செல்லக்கூடாது வரும் வழித்தடங்களில் சரவெடி, பேப்பர் வெடி, சணல் வெடி போடுவதற்கும் அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷம் எழுப்பவோ கூடாது. வாகனங்களில் வரும்போது, வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது. கொரோனா பெருந்தொற்று அதிகளவில் பரவி வருவதால், பொது இடங்களில் ஒலிபெருக்கி வைத்தல், வெடிபோடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. தற்போது கொரோனா தொற்று நோய் பரவல் 144 தடை அமலில் இருப்பதாலும் ஜோதி, முளைப்பாரி, சிலம்பம், பால்குடம் ஆகியவற்றுடன் ஒரே இடத்தில் நின்றுகொண்டோ, ஊர்வலமாக நடந்தோ வேறு எந்த வகை ஊர்வலத்திற்கும் அனுமதி இல்லை. அன்னதான கூடம் அமைத்து அமர்ந்து பரிமாறி சாப்பிடும்போது, சமூக இடைவெளி குறைந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அன்னதான கூடம் அமைத்து பரிமாறி அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவு படி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள், நிறுவ, கைகளில் ஏந்தி நிற்க அனுமதி இல்லை. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வெளி மாவட்டங்கள், வெளியூர் மக்கள் பசும்பொன் வர மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், அறிவுறுத்தியுள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!