Home செய்திகள் ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தின ரத்த தான முகாம்

ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தின ரத்த தான முகாம்

by mohan

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் ரெட் கிராஸ் மாவட்ட தலைவருமான கொ.வீரராகவ ராவ் வழிகாட்டல் படி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ், யூத் ரெட் கிராஸ் மற்றும் பிண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர் சார்பாக தன்னார்வ ரத்த தான முகாம் ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.6.2020) நடைபெற்றது. ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் ஏவிஎம்எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், ஜேஆர்சி துணைத் தலைவருமான எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம். ரமேஷ் வரவேற்றார். ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன், ஆயுட்கால உறுப்பினர் தி. ஜீவா ஆகியோர் ரத்த தானம் அவசியம் பற்றி பேசினர். ரெட் கிராஸ் புரவலர் முனைவர் எம். உலகராஜ், நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ஜே. ரமேஷ் பாபு, பிரண்ட்ஸ் டூ சப்போர்ட் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.வி. சதீஷ்குமார், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோமன் அக்ரம், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஏ. வள்ளிவிநாயகம் ஆகியோர் உட்பட 35 பேர் ரத்த தானம் செய்தனர் .மண்டபம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் எம். பாலமுருகன் நன்றி கூறினார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அ. பாக்ய சகாய மெர்சி தலைமையில் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் ரத்த தான பிரிவு அமைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன், பசுமை ரெட் கிராஸ் அமைப்பாளர் ஏ.மலைக்கண்ணன், ஆயுட்கால உறுப்பினர்கள் என். கார்த்திக், ஜே. முத்துக்குமாரன், எல். கருப்பசாமி, ஆம்புலன்ஸ் டிரைவர் சி. தயாநிதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com