Home செய்திகள் தவற விட்ட நகை பையை ஒப்படைத்த பெண்ணின் நேர்மை போலீசார் பாராட்டு

தவற விட்ட நகை பையை ஒப்படைத்த பெண்ணின் நேர்மை போலீசார் பாராட்டு

by mohan

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி, 26. இவர், கீழச்செல்வனூர் கோட்டையேந்தலில் உள்ள தந்தை வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் ஏப்.16 காலை கிளம்பினார்.பையில் வைத்து எடுத்து வந்த 10 பவுன் நகை, பள்ளி சான்றுகள், ரூ. 1000 ஆகியன வழியில் தவறி விழுந்து விட்டதாக, சிக்கல் காவல் போலீசில் செல்வி புகார் அளித்தார். இதன்படி சிக்கல் சிறப்பு சார்பு ஆய்வாளார் மலைராஜ் , காவலர் முரளி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வி தவற விட்ட பொருட்கள் அடங்கிய பையை வழியில் கண்டெடுத்ததாக சிக்கல் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகவேல் மனைவி சந்தனமாரி போலீசில் ஒப்படைத்தார். தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொண்ட செல்வி, சிக்கல் போலீசார்  சந்தனமாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாகவேல் மகன் சந்தன மாரியை சிக்கல் போலீசார் பாராட்டினர். இதனை தொடர்ந்து கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் , சிக்கல் காவல் ஆய்வாளர் சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜ் ஆகியோர் சந்தனமாரிக்கு மின்விசிறி, 25 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் வழங்கினர்.இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி, 26. இவர், கீழச்செல்வனூர் கோட்டையேந்தலில் உள்ள தந்தை வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் ஏப்.16 காலை கிளம்பினார்.பையில் வைத்து எடுத்து வந்த 10 பவுன் நகை, பள்ளி சான்றுகள், ரூ. 1000 ஆகியன வழியில் தவறி விழுந்து விட்டதாக, சிக்கல் காவல் போலீசில் செல்வி புகார் அளித்தார். இதன்படி சிக்கல் சிறப்பு சார்பு ஆய்வாளார் மலைராஜ் , காவலர் முரளி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வி தவற விட்ட பொருட்கள் அடங்கிய பையை வழியில் கண்டெடுத்ததாக சிக்கல் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகவேல் மனைவி சந்தனமாரி போலீசில் ஒப்படைத்தார். தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொண்ட செல்வி, சிக்கல் போலீசார் , சந்தனமாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாகவேல் மகன் சந்தன மாரியை சிக்கல் போலீசார் பாராட்டினர். இதனை தொடர்ந்து கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் , சிக்கல் காவல் ஆய்வாளர் சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜ் ஆகியோர் சந்தனமாரிக்கு மின்விசிறி, 25 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் வழங்கினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!