இராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு புதிய கட்டிட திறப்பு விழா..

இராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அஞ்சலோ, சகோதரர் எட்வர்ட் பிரான்சிஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவில் சகோதரர் சூசைமாணிக்கம், எட்வர்ட் பிரான்சிஸ், அகஸ்டின், அருள் ஆனந்த், ஜெசுதாஸ் பள்ளி முதல்வர் ஸ்டீபன் சவரி ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 14 லட்சம் செலவில் பள்ளி அனைத்து பிரிவிற்க்கும் சோலர் மின்சார வசதியை சிறப்பு விருந்தினர் மாநில தலைவர் அஞ்சலோ மாநிலம் சகோதரர் எட்வர்ட் பிரான்சிஸ் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து 13 வது விளையாட்டு விழாவில் ஒட்ட பந்தயம் 100,200, 300 மீட்டர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் கட்டிட பொறியாளர் ஜானுக்கு நினைவு பரிசை இண்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் சகோதரர் அகஸ்டின் வழங்கினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் பொருளாளர் ஜெசுதாஸ் கலந்து கொண்டார்.