Home செய்திகள் பக்தர்கள் வருகையின்றி ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரைகள் வெறிச்சோடியது

பக்தர்கள் வருகையின்றி ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரைகள் வெறிச்சோடியது

by mohan

ஒவ்வொரு ஆண்டும் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் தேசிய புண்ணிய தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. நடப்பாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ( 20.7.2020) தமிழகத்தின் பல்வேறு நகரங்கள், வெளி மாநில பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பித்ருக்களுக்கு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோருக்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது.

ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உணர்ந்து ஆடி அமாவாசை தினமான இன்று (20.7.2020) பொதுமக்கள் யாரும் திதி, தர்ப்பணம் உள்ளிட்ட பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், திருப்புல்லாணி அருகே சேதுக்கரை, தேவிபட்டினம் நவபாஷானம், சாயல்குடி அருகே மாரியூர் மற்றும் இதர கடற்கரை ஓரங்களிலும் சடங்குகள் செய்யவும், மக்கள் கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி மறுத்தது. தடை உத்தரவை மீறி வரும் வாகனங்கள், நபர்கள் மீது சட்டப்ப படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடும் அக்னி தீர்த்தக்கடல் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது. 144 தடை உத்தரவை மீறி ராமேஸ்வரம் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்த பாம்பன் பால நுழைவு வாயில், ராமேஸ்வரத்தின் முக்கிய நகர்களில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் அக்னிதீர்த்த கடல் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப் வருகின்றனர்., போலீசார் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் இறங்குவதை கண்காணிக்க மெரைன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். உள்ளூர் மக்கள் புரோகிதர்கள் இன்றி கடலில் நீராடினர். அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், தனுஷ்கோடி சேது தீர்த்தம், சேதுக்கரை, தேவிபட்டினம் நவபாஷாணம் கடலில் புனித நீராட தடையால் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 13 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 300 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!