நடுக்கடலில் மீனவர் மரணம்

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தங்கச்சி மடம் மார்க்கோபோலோ என்பவரது விசைப்படகில் மீனவர் 4 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன சுபாஷ் சந்திர போஸ் (27) என்பவருக்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சுபாஷ் சந்திர போஸை சக மீனவர்கள் துரிதமாக கரை சேர்த்தனர். அதிகாலை 4 மணியளவில் சுபாஷ் சந்திர போஸை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதனையில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மெரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..