Home செய்திகள் இராமநாதபுரம் எம்.எல்.ஏ., நிதி

இராமநாதபுரம் எம்.எல்.ஏ., நிதி

by mohan

இராமநாதபுரம் அம்மா உணவகத்தில் மூன்று வேளை உணவுக்கு எம்.எல்.ஏ., நிதி.

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 3ம் கட்ட தேசிய ஊரடங்கு இன்று முதல் அமலில் உள்ளது. இக்காலகட்டத்தில் வருவாய் இன்றி சிரமப்படும் ஏழை, எளியோர், வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் உணவு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தினர். இதன்படி, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மக்கள் மே 4 – மே 17 வரை 14 நாட்களுக்கு, 3 வேளை உணவை ராமநாதபுரம் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதற்கான செலவுத் தொகை ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையை அதிமுக., மருத்துவரணி துணை செயலரும், இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் எம். மணிகண்டன், நகராட்சி ஆணையர் விஸ்வநாதனிடம் வழங்கினார். மாவட்ட அதிமுக., அவைத்தலைவரும், ராமநாதபுரம் ராம்கோ சேர்மனுமான செ.முருகேசன் உடன் உள்ளார்.

ராமேஸ்வரத்தில் 500 பேருக்கு எம்எல்ஏ., நிவாரண நிதி

கொரானா பரவல் தடுப்பு கால கட்டத்தில் மார்ச் 25 முதல் வாழ்வாதாரம் பாதித்த ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பல்வேறு தரப்பு மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம். மணிகண்டன் அரிசி, மளிகை பொருட்கள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இந்நிலையில் 3ஆம் தேசிய ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து வாழ்வாரம் பாதித்த ராமேஸ்வரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதி முடிதிருத்துவோர் உள்பட 500 பேருக்கு அதிமுக மருத்துவ அணி துணை செயலரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம். மணிகண்டன் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு கால நிவாரண நிதி மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!