Home செய்திகள் பாண்டியூர் மேள தாள இசை கலைஞர்களுக்கு தேமுதிக நிவாரணம்

பாண்டியூர் மேள தாள இசை கலைஞர்களுக்கு தேமுதிக நிவாரணம்

by mohan

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் நடுத்தர, தினக்கூலி தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வாழ்க்கையை நகர்த்த இயலாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனையறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க நிவாரணம் வழங்குமாறு தேமுதிக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேமுதிக., இராமநாதபுரம் மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் வீடு தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியூர் கிராம மேள தாள இசை கலைஞர்களின் குடும்பங்கள் உணவு கிடைக்காமல் அவதியுற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த தேமுதிக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா பாண்டியூர் சென்று அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் , குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை சமூக விலகலை கடைப்பிடித்து வழங்கினார். இதில் பரமக்குடி நகர் பொறுப்பாளர் அன்பு தட்சிணாமூர்த்தி, நயினார்கோவில் ஒன்றிய செயலர் இருளாண்டி, போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!