Home செய்திகள் சாத்தான்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் ரத்த சோகை இல்லா இந்தியா விழிப்புணர்வு

சாத்தான்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் ரத்த சோகை இல்லா இந்தியா விழிப்புணர்வு

by mohan

இராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த சோகை இல்லா இந்தியா விழிப்புணர்வு முகாம் நடந்தது.உதவி தலைமை ஆசிரியர் சுவாமி தாஸ் தலைமை வகித்தார். ரத்தசோகை மூலம் ஏற்படும் பாதிப்புகள், தன் சுத்தம் குறித்துகிராம சுகாதார செவிலியர் குரு நாகராணி விளக்கம் அளித்தார். தேசிய ஊட்டச்சத்து இரு வார விழாவை முன்னிட்டு வளரிளம் பருவ மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து உணவின் அவசியம், ஆரோக்கிய உணவு வகைகள் காய்கறிகள் மற்றும் கீரைகள் அதிகம் உண்ண வேண்டும். காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரக்கூடாது. கடையில் விற்கும் துரித உணவுகளை உண்ண கூடாது. இயற்கை உணவில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளனர். பிடித்த உணவுகளை மட்டும் உண்ணாமல் வீட்டில் அம்மா கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும். பேரிச்சம் பழம், நிலக்கடலை மிட்டாய் சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்துகள் கிடைக்கும் வேண்டும். சீனி பயன்படுத்துவதை தவிர்க்கவும், நாட்டு சக்கரையை பயன்படுத்த வேண்டும். எலுமிசசம்பழம் சாறு காலையில் பருகலாம். பழச்சாறு, இயற்கை ஊட்டச்சத்து உண்ணும் போது டீ மற்றும் காப்பி குடிக்க கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் பரவி வருவதை தடுக்க நீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். கிராம சுகாதார நிலையம் மூலம் பள்ளியில் வழங்கப்படும் இரும்புசத்து மாத்திரைகளை முறையாக உண்ண வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் குடற்புழு நீக்கம் மாத்திரைகளை உண்ண வேண்டும்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும், மாலையில் விளையாட வேண்டும். முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்களால் ரத்தசோகை இல்லா இந்தியாவை உருவாக்க முடியும் என அங்கன்வாடி பணியாளர்கள் சுதா, புவனேஸ்வரி, சுந்தரி பாத அமுது ஆகியோர்விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கைகழுவும் முறை குறித்து மாணவர்களுக்குகிராம சுகாதார செவிலியர் ஜெயாசெயல் விளக்கம் அளித்தார். மாணவர்கள் தன் சுத்தம் பேணவேண்டும், கொரோனா போன்ற நோய்கள் வராமல் இருக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். நகங்களை வெட்ட வேண்டும். தினமும் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.விழிப்புணர்வில் மாணவர்களின் உயரம் மறறும் எடை சோதனை செய்து, எடை குறைவான மாணவர்களுக்கு எடை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணாக்கர், ஆசிரியர்கள் செந்தில் வடிவேலன், சாந்தி, வத்சலா தேவி, நிஷா, சுமதி, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெரோம் நன்றி கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!