Home செய்திகள் கீழக்கரையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு

கீழக்கரையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை தனி தாலுகாவாக தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் தாலுகா ஆபிஸ் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கீழக்கரை துணை மின் நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் அரசுக்கு தானம் வழங்கினார். இந்நிலத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் ரூ.2 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான கீழக்கரை தாலுகா அலுவலகம் மற்றும் குடியிருப்பு உட்பட ரூ.5. 87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 01.3.2020 அன்று திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் கீழக்கரை புதிய தாலுகா அலுவலகம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் முன்னிலையில் இன்று ( 11.3.2020) முதல் செயல்பட தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குத்து விளக்கேற்றி , வருவாய் துறை பணிகளை தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வட்டாட்சியர் பி.வீரராஜ், தலைமையிடத்து வட்டாட்சியர் ரத்தின மூர்த்தி, வட்டாட்சியர்கள் சிக்கந்தர் பபிதா (டாஸ்மாக்), ஷேக் ஜலாலுதீன் ( உணவு வழங்கல்), செந்தில்குமார் (அரசு கேபிள் டிவி), ஜமால் முகமது (தேர்தல்), மண்டல துணை தாசில்தார் சாந்தி, நில முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் சாரதா, ஹேமலதா, ஸ்கந்தகுமாரி, வருவாய் ஆய்வாளர்கள் பார்கவி (கீழக்கரை), ரமேஷ் (திருப்புல்லாணி), லூர்து மலர் (உத்திரகோசமங்கை), அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் குமரன், தமிழரசு, களஞ்சியம், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், மூர்த்தி, நில அளவை உதவி இயக்குநர் கந்தசாமி, நில அளவை ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!