Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 ஆண்டு விழா லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 ஆண்டு விழா லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

by mohan

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 வது ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் வரவேற்றார். கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் மாரீஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். 2017-18, 2018 -19 லீக் போட்டிகள் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ஜெயமுத்துராமலிங்கம் அறிக்கை வாசித்தனர். 2017-18 லீக் ஆட்டங்களில் டிவிஷன் 1ல் முதலிடம் மாஸ்டர் தண்டர் , 2 ம் இடம் ரெயின்போ , டிவிஷன் 2ல் முதலிடம் நியூ இளம்புயல், 2ம் இடம் நியூ ஸ்டார் அணிகள்,2018 -19 லீக் ஆட்டங்களில் டிவிஷன் 1ல் முதலிடம் ஏஆர் எஸ், 2ம் இடம் நேதாஜி, டிவிஷன் 2ல் முதலிடம் எம்எம்பி, 2 ம் இடம் கலைப்புலி அணிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் பரிசு கேடயங்கள், கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார்.அவர் கூறுகையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லையில் நாளை (ஆக. 11), திண்டுக்கல்லில் (ஆக., 13) அரை இறுதி ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (ஆக., 15) இறுதி ஆட்டம் நடைபெற உள்ளன. லீக் ஆட்டங்களில் பங்கேற்க கிராமப்புற வீரர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் படிப்படியாக முன்னேறி தமிழ்நாடு ரஞ்சி டிராபி, ஐபிஎல்., போட்டிகளில் விளையாடலாம். ராமநாதபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் வழிகாட்டுதல் படி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.2017-18 சீசன் டிவிஷன் 1ல் 292 ரன் குவித்த ரெயின்போ அணி வீரர் ஆனந்த மணிகண்டன் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும்,26 விக்கெட் சாய்த்த ரெயின்போ அணி வீரர் அருண்குமார் சிறந்த பவுலர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். * 2017-18 சீசன் டிவிஷன் 2ல் 342 ரன் குவித்த நியூ ஸ்டார் அணி வீரர் அஜய் சபரீஷ்சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும்,20 விக்கெட் சாய்த்த நியூ இளம்புயல் அணி வீரர் அபுதாஹிர் சிறந்த பவுலர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். * 2018-19 சீசன் டிவிஷன் 1ல் ஒரு சதத்துடன் 325 ரன் குவித்த ஏஆர்எஸ் அணி வீரர் சுப்ரமணி சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், 24 விக்கெட் சாய்த்த ரெயின்போ அணி வீரர் அருண்குமார் சிறந்த பவுலர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். * 2018-19 சீசன் டிவிஷன் 2 ல் ஒரு சதத்துடன் 353 ரன் குவித்த செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர் நிஷாந்த்சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும்,29 விக்கெட் சாய்த்த எம்எம்பி அணி வீரர் முத்துராமலிங்கம் சிறந்த பவுலர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். 2019 – 18 சீசன் டிவிஷன் 1ல் 14, 19 வயதிற்குட்பட்டோர் ஆட்டங்களில் சிறந்த இளம் வீரராக தீனதயாள ராஜா தேர்வு செய்யப்பட்டார்* 2018 – 19 சீசன் டிவிஷன் 1ல் 14, 19 வயதிற்குட்பட்டோர் ஆட்டங்களில் சிறந்த இளம் வீரராக அஜய் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். ஏஆர்எஸ் அணி வீரர்கள் சுப்ரமணி, அருண் பிரஷாத், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வீரர் கே.மனோஜ் ஆகியோருக்கு சிறப்பான ஆட்ட விருது வழங்கப்பட்டது.முதல், இரண்டாம் இடம் பிடித்த தலா 4 அணிகளுக்கு பரிசு கேடயங்கள், தனி நபர் கோப்பைகள், கிரிக்கெட் உபகரணங்களை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜெ.எஸ்.ரமேஷ் பாபு வழங்கினார்.செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி நன்றி கூறினார். கிரிக்கெட் அசோசியேஷன் உப தலைவர்கள் அண்ணா துரை, பாலசங்கர், செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!