Home செய்திகள் மதுரை ரயில் நிலையத்தில் நவீன ஓய்வறை, உணவகம் திறப்பு

மதுரை ரயில் நிலையத்தில் நவீன ஓய்வறை, உணவகம் திறப்பு

by mohan

மதுரை ரயில் நிலையத்தில் நவீன ஓய்வு அறை, உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. 8 ஓய்வு அறை மற்றும் 40 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலான சைவ, அசைவ உணவு மூன்று நட்சத்திர விடுதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் திறந்து வைத்தார். தென் மண்டல இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா சுற்றுலா கழக பொது மேலாளர் எஸ். ஜெகநாதன், மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, மதுரை ரயில்வே நிலைய இயக்குநர் சஜ்ஜன்குமார் முன்னிலை வகித்தனர்.புதிய நவீன ஓய்வு அறைகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, தொலைபேசி வசதி, நவீன குளியலறை, கழிப்பறை வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தேனீர் தயாரிப்பு மின்கலம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் புதிய உணவு விடுதியில் நவீன காய்கறி நறுக்கும் இயந்திரம், பெரிய அளவிலான உணவு தயாரிக்கும் இயந்திரம், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை பாதுகாப்பதற்கான குளிர்பதன அறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகள் உள்ளன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!