Home செய்திகள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னோடி திட்டமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது

மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னோடி திட்டமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது

by mohan

மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் பேச்சு.ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,பல்வேறு அரசுத் துறைகள்சார்பாக 55 பயனாளிகளுக்குரூ.5,06,098 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:ஆற்றாங்கரை மக்கள் வழங்கிய 18 கோரிக்கைகளை நிறைவேற்றிட அந்தந்த துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் பெருமளவில் தென்னை மற்றும் பனை மரங்கள் காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை விவசாயத்தை மேம்படுத்திட தேவையான இயந்திரங்கள்பெற்றுத்தர உடனடி நடவடிக்கைகள் எடுக்கடும்.

விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட்டு 2016-17ம் நிதியாண்டிற்கு ரூ.528 கோடி அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் நிதியாண்டிற்கு ரூ.477 கோடி அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2018-2019ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழை நமக்கு மிகவும் குறைவாக வரப்பெற்றுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் விளைந்துள்ளன. எனவே அரசு அவற்றை கவனத்தில் கொண்டு மாற்றுப்பயிர்கள், மழை நீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு ஆணையின்படிமழைநீர் சேகரிப்பில் முன்னோடியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு வரவுக்கால்வாய்களும் தூர் வாரப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டில் 69 கண்மாய்கள் ரூ.37.59 கோடி மதிப்பில் மாவட்டம் முழுவதும் அணைகள் பலப்படுத்துதல், வரவுக்கால்வாய்கள் தூர்வாருதல், மதகுகள் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1,112 ஊராட்சி ஒன்றியக் கண்மாய்களும், 3000-க்கும் மேற்பட்ட ஊரணிகளும் உள்ளன. அவற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிடவும், தூர் வாரிடவும், கரைகளை பலப்படுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் அறிவித்த சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக ராமநாதபுரம் இருப்பதால் தனியார் துறைகளின் சிஎஸ்ஆர் நிதி மூலமாக மழைநீர் சேகரிப்பு மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு முதற்கட்டமாக சுமார் ரூ.2 கோடி மதிப்பில் 200 ஊரணிகள் தூர் வாரிடவும், இதன் மூலமாக பொது இடங்களில் மழைநீர் சேகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.ஒரு லட்சம் முழு மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.பனைத் தொழிலை மேம்படுத்திட ரூ.40 லட்சம் மானியம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு 1.46 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.என தெரிவித்தார்.

இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) கோபு, கால்நடைத்துறை இணை இயக்குநர் பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சொர்ணலிங்கம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், வேளாண் பொறியாளர் பாலாஜி,வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!