Home செய்திகள் ராமநாதபுரம் அருகே தோப்பு காவலாளி மர்மக் கொலை எஸ்.பி., விசாரணை

ராமநாதபுரம் அருகே தோப்பு காவலாளி மர்மக் கொலை எஸ்.பி., விசாரணை

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் சாமிதோப்பு பகுதிபைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 47. தோப்பு காவலாளி யாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மகளும், கருப்பசாமி, முத்துக்குமார் என்ற மகன்களும் உள்ளனர். ராஜலட்சுமியை கீழக்கரையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். குடும்ப பிரச்னையால், ஆற்றாங்கரை உமர் நகரில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவலாளியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தோப்பில் நேற்று முன் தினம் இரவு தனிமையில் தூங்கிப அவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். ஆற்றாங்கரை ஹாஜா முகைதீன் என்பவர் தகவல் படி உச்சிப்புளி போலீசார் சம்பவம் விரைந்தனர். அங்கு கழுத்து, பிடறி, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் கிடந்த முனீஸ்வரன் உடலை கைப்பற்றினர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ். பி., ஓம் பிரகாஷ் மீனா, ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ், உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தீவிர விசாரித்தனர். முனிஸ்வரன் மனைவி பஞ்சவர்ணம், அவரது உறவினர்கள், நண்பர்கள், தென்னந்தோப்பு உரிமையாளரிடம் தனித்தனியாக விசாரித்தனர். முனீஸ்வரன் உடலை முதலில் பார்த்த ஹாஜா முகைதீன் உள்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றனர். எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், முனீஸ்வரன் கொலை தொடர்பாக மூன்று கோணங்களில் விசாரித்து வருகிறோம், என்றார்.இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் சாமிதோப்பு பகுதிபைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 47. தோப்பு காவலாளி யாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மகளும், கருப்பசாமி, முத்துக்குமார் என்ற மகன்களும் உள்ளனர். ராஜலட்சுமியை கீழக்கரையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். குடும்ப பிரச்னையால், ஆற்றாங்கரை உமர் நகரில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், தோப்பில் நேற்று முன் தினம் இரவு தனிமையில் தூங்கிப அவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். ஆற்றாங்கரை ஹாஜா முகைதீன் என்பவர் தகவல் படி உச்சிப்புளி போலீசார் சம்பவம் விரைந்தனர். அங்கு கழுத்து, பிடறி, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் கிடந்த முனீஸ்வரன் உடலை கைப்பற்றினர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ். பி., ஓம் பிரகாஷ் மீனா, ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ், உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தீவிர விசாரித்தனர். முனிஸ்வரன் மனைவி பஞ்சவர்ணம், அவரது உறவினர்கள், நண்பர்கள், தென்னந்தோப்பு உரிமையாளரிடம் தனித்தனியாக விசாரித்தனர். முனீஸ்வரன் உடலை முதலில் பார்த்த ஹாஜா முகைதீன் உள்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றனர். எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், முனீஸ்வரன் கொலை தொடர்பாக மூன்று கோணங்களில் விசாரித்து வருகிறோம், என்றார்.இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!