Home செய்திகள் ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

by mohan

ராமநாதபுரம் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டார். அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 26.3.2019 ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெளியிடப்பட்டவாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 4,25,568 ஆண் வாக்காளர்கள், 4,24,367 பெண் வாக்காளர்கள் மற்றும் 38 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) என 8,49,973 வாக்காளர்கள் உள்ளனர். 7 பேரூராட்சிகளில் 37,361 ஆண் வாக்காளர்கள், 37,935 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) என 75,298 வாக்களார்கள் உள்ளனர். 4 நகராட்சிகளில் 97,562 ஆண் வாக்காளர்கள், 99,577 பெண் வாக்காளர்கள் மற்றும் 31 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) என 1,97,170 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) என 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர். என்றார்.உதவி இயக்குநர்கள் வீ.கேசவதாசன் (ஊராட்சிகள்), ராஜா (பேரூராட்சிகள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) கணேசன் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!