Home செய்திகள் ஆதரவற்றோர் இல்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி இன்னர்வீல் சங்கம் ஏற்பாடு

ஆதரவற்றோர் இல்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி இன்னர்வீல் சங்கம் ஏற்பாடு

by mohan

இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற கார் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மகளிர் அங்கமான இன்னர் வீல் சங்கம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டு அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள், கருத்தரங்கு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்: இந்நிலையில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பெண்மையை போற்றுவோம், முதியோரை காப்போம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் பங்கேற்ற கார் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இன்னர் வீல் சங்க மாவட்ட சேர்மன் லட்சுமி வர்த்தினி ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் மார்னிங் ஸ்டார் கவிதா செந்தில் குமார் தலைமை வகித்தார். செயலாளர் கிருத்திக் ரகுநாத் வரவேற்றார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பாம்பன் பாலம், தங்கச்சிமடம் , ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி சென்றது. அங்கு பொது மக்களிடம்முதியோரை காப்போம் முதுமையை போற்றுவோம்’, ‘ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரணாய் இருப்போம்’ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைஇன்னர்வீல் சங்க நிர்வாதிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர்.டாக்டர்கள் மதுரம் அரவிந்தராஜ், கனகபிரியா பால்ராஜ்,கவிதா லோகநாதன், கீதா ரமேஷ், பிரதா சிவகுமார், செல்வி நாகரத்தினம் , சகீலா ரஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் இன்னர்வீல் சங்க தலைவர் மார்னிங் ஸ்டார் கவிதா செந்தில்குமார் கூறுகையில், ராமநாதபுரம் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம். ஆங்கில பயிற்சி அளித்துள்ளோம். ஆதரவற்றோர், பெண், முதியோருக்கு தொடர்ந்து அரணாக இருப்போம் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!