இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புரோகிதர்களின் பூநூலை அறுத்து அவமானபப்டுத்தியதாக கூறி ராமேஸ்வரத்தில் புரோகிதர்கள் வேலை நிறுத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரியார் சிலைகளை உடைப்போம் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேசியச் செயாளர் ஹெச்.ராஜா முகநூலில் பதிவு செய்யபட்ட கருத்தால் எழுந்த சர்ச்சையால் கடும் எதிர்பு எழுந்தது. இந்நிலையில் சென்னையில் புரோகிதர்களின் பூநூலை சிலர் அறுத்து அவர்களை அவமானப்படுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் உள்ள புரோகிதர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்ப்பட்டோர்கள் அக்னீதீர்தக் கடற்கரையின் அருகே மொளனமாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இன்று சென்னையில் புரோகிதர்கள் சார்பில் நடைபெறவுள்ள கன்ட ஆர்பாட்டதிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை ஐந்து மணி முதல் மாலை ஆறுமணிவரை புரோகிதம் செய்யாமல் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ராமேஸ்வரத்திற்கு முன்னோர்களுக்காக தர்பனம் மற்றும் காரீயங்கள் தோஷ நிவர்த்திகள் செய்ய வெளியூர்களிலிருந்து வந்த யாத்ரீகர்கள் மற்றும் வெளியூர்பக்தர்கள் ஏமாற்றமும் அவதியும் அடைந்தனர்.
அதன் பின் போலீஸாரின் வேண்டுகோளுக்கு இனங்க நான்கு புரோகிதர்கள் மட்டும் அக்னி தீர்த கடற்கரையில் அதிக தொலைவில் இருந்து வந்தவர்களுக்கு தர்பணம் மற்றும் தோஷநிவர்த்தி கடன்களை செய்தனர். இதனல் ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தர் பணம் மற்றும் தோஷ நிவர்த்தி செய்தனர்.
You must be logged in to post a comment.