இராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு தோண்டும் போது வெடிகுண்டுகள்…

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி மற்றும் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இது மிகவும் பழைய ஏகே 47 ரக துப்பாக்கிகள் என்று கூறப்படுகிறது. இவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகிறார். அந்த வீட்டில் புதைக்கப்பட்டு இருந்த 21 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரிடம் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.