Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ராமநாதபுரத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !

ராமநாதபுரத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக கூறி இன்று முதல் நாள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்காக புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர. மேலாண்மை பணிக்கான சிறப்பு பணியிடங்கள் உருவாக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும். திமுக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் ஊரில் உங்களை தேடி மக்களுடன் முதல்வர் போன்ற திட்டங்களில் வருவாய் துறை அலுவலர்களுக்கு பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் உரிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் இன்று செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!