Home செய்திகள் ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா!83 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா!83 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

by Askar

ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா!
83 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேச ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 68 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 63 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் உள்பட
189 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இருவருக்கு திருமண உதவித்தொகை ரூ.1 லட்சம்
இயற்கை மரணமடைந்த
ஒருவரின் குடும்பத்திற்கு
ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.17 ஆயிரம்,
ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூ.9,050, மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர் 5 பேருக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான பராமரிப்பு மானியம் ரூ.1.25 லட்சம், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 50 பேருக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் ரூ.25 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரம் ரூ.1,06,343, வேளாண் துறை சார்பில் ஒருவருக்கு விதை கிராமத் திட்டம் (2023-2024) உளுந்து விதை ரூ.384, ஒருவருக்கு மின்கல விசைத்தெளிப்பான் ரூ.2,025, பயிர் விளைச்சல் முதல், இரண்டு பரிசு தொகை ரூ.25 ஆயிரம் என 83 பயனாளிகளுக்கு ரூ.28.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.
காவல் துறை துணைத்தலைவர், ராமநாதபுரம் (சரகம்)எம்.துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜூலு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொ.ரத்தினசாமி, வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வன அலுவலர் எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com