பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.
68
You must be logged in to post a comment.