Home செய்திகள் எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..

எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..

by Askar

எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..

எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினர் அடையாளமாக திகழும் என ராமநாதபுரத்தில் நடந்த மனிதநேய வார விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேசினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.01.2024) மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்றார். மனிதநேய வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பேசுகையில், மனிதநேயம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்றாகும். காலச்சூழ்நிலையும், நெருக்கடிகளும் தான் வேறுபாடுகளை காண முடிகிறது. அந்த வேறுபாடுகளை அகற்றி எப்பொழுதும் எல்லோரும் எந்த நிலைப்பாட்டிலும் மாறாத வகையில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வாழ வேண்டும் என்பதன் நோக்கம் தான் இந்த மனிதநேய வார விழாவாகும். ஒவ்வொருவரும் உங்கள் திறமைகளை பிறருக்காக விட்டு கொடுக்காமல் தனித்துவத்துடன் வாழ்ந்து பிறரின் அன்பை பெற்று வாழ்ந்திடும் வகையில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்று உள்ளீர்கள். உங்களிடையே நல்ல அன்புகளை பகிர்ந்து மனித நேயத்தோடு வாழ நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து வாழும் இடத்தில்தான் சிறந்த சமுதாயத்தின் அடையாளம் துவங்கும். அதை உணர்ந்து அனைவரும் எவ்வித பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் நல் அன்புடன் வாழ்ந்து மனித நேயமிக்க சமுதாயமாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். செங்கபடை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, பழஞ்சிறை ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, வடவயல் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, காட்டுப்பரமக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, நிலையாம்படி ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, பாம்புவிழுந்தான் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், குழு நடன கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, பேராசிரியர்கள் துரைப்பாண்டி, ஜெயபிரகாஷ், தனி வட்டாட்சியர் வீரராஜ் மற்றும் விடுதி காப்பாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!