Home செய்திகள் ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டம் ..!

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டம் ..!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவளம், நீர் வளம், கடல் வளம், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தி மண்ணுரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் வளத்தை பாதிக்கும் இத்திட்டத்துக்கு திமுக அரசு துணை போகாமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும். கடந்தகால திமுக ஆட்சியில் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் படித்து பார்க்காமல் கையெழுத்திட்டதாக கூறிய வரலாறை அனைவரும் அறிவோம். அதேபோல இவ்விவகாரத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், உடனடியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்துக்கு அனுமதியை மறுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட கோரியும், வைகை படுகையான ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், இதற்காக ஒரு சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தும் “மண்ணின் மைந்தர்கள்” அமைப்பினர் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!