முஸ்லிம் சமுதாயத்தின் மிகவும் புனிதமான மாதமாகும் ரமலான் மாதம். முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இந்த புனித மாதத்தில் இறை வணக்கத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். அதுபோல் இம்மாதத்தில் பல் வேறு இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
இன்னும் புனித ரமலான் தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில் ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சென்னை ரய்யான் ஹஜ் மற்றம் உம்ரா சர்வீஸ் நிறுவனம் சார்பாக 03-05-2017 அன்று ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அப்துல்லாஹ் பிர்தவ்ஸி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியை மாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள சென்னை கேட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது.
You must be logged in to post a comment.