பாபர் மசூதி வழக்கு நிலுவையில் இருக்கும் வேளையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டது.அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வக்பு வாரியம் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இது வரை அதற்கான விசாரணை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்,அயோத்தியில் உள்ள ஶ்ரீ ராம் ஜன்மபூமி நியாஸ் பட்டறையில் ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான 1.75 லட்சம் தூண்களில் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் பாதி அளவு கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 24 லாரிகளில் கல் தூண்கள் பட்டறைக்கு வந்தடைந்துள்ளது.அது பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைவரும் எதிர்ப்பார்த்து இருந்த பாபர் மசூதி வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதி மன்றத்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து வக்பு வாரியம், விசாரனையை ஜூலை 2019 வரை ஒத்தி வைக்கக் கோரி செய்த மனுவை நிராகரித்து,விசாரனையை பிப்ரவரி 8 2018 அன்று முதல் துவங்கும் என்று ஆணைப் பிறப்பித்துள்ளது.இந்த வழக்கில் வக்பு வாரியம் சார்பாக ஆஜராகிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்குரைஞர் கபில் சிபல் “ஏன் நீதிமன்றம் அவசரப்படுகிறது” என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பாபர் மசூதி விஷயத்தில் காங்கிரசின் நிலைபாடு என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் பாபர் மசூதி வழக்கு கால் நூற்றாண்டை கடந்து நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவரமாக நடந்து வருவது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக இருக்கும் நீதி மன்ற தீர்ப்பை மட்டுமே நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..