திருப்புல்லாணி மேலப்புதுக்குடி மற்றும் கீழப்புதுக்குடியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை..

தமிழகத்தில் இந்த வருடம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பருவ மழையும் பொய்த்து விட்டதால் நீர் நிலைகள் வற்றிய நிலையில் விவசாயமும் கடுமையாக பாதித்துள்ளது. அதே போல் குடிநீருக்காக பொதுமக்கள் தினமும் போராடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இராமநாதபுரம் திருப்புலானி அருகில் உள்ள மேலப்புதுக்குடி மற்றும் கீழப்புதுக்குடி ஆகிய இரண்டு ஊர் ஜமாத்துக்களைச் சார்ந்த மக்கள் இன்று மழைக்காக சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர். இத்தொழுகையில் 500கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இத்தொழுகைக்கான ஏற்பாட்டை அவ்வூர் இளைஞர்கள் செய்திருந்தனர்.