
தமிழகத்தில் பல பகுதிகளில் மதுபானக் கடைகளை அகற்றக் கோரி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகரில் மக்கள் திடீரென மதுபானக் கடையை அகற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
You must be logged in to post a comment.