உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது குறிஞ்சி நகர். இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர். இது குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் பலமுறை குறிஞ்சிநகர் மக்கள் குடிநீர் கேட்டு மனுஅளித்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களுடன் சேர்ந்து ; மார்க்சிஸ்ட் கட்சியினர் தேனி தேசிய நெடுங்காலையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநிர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.