டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தது தொடர்பாக.
இந்த உத்தரவை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமும் இணைந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் அந்தந்த தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை கிராம நிர்வாக அலுவலர்களை மட்டும் வைத்து முடிக்க நினைக்கும் செயலை கண்டித்தும்,அதற்கான தேவையான உபகரணங்களை வழங்காமலும், இப்பணிக்கு கூடுதல் அலுவலர்களை நியமிக்காமலும், எடுத்தோம் கவிழ்த்தோம் போன்ற விதமாக இந்த உத்தரவு உள்ளதாகவும்,இது போன்ற ஊழியர் விரோத போக்கை கண்டிக்கும் விதமாகவும் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.