Home செய்திகள் இராமநாதபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்… வீடியோ..

இராமநாதபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்… வீடியோ..

by ஆசிரியர்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் வேளாண் திட்ட காப்பீடு, இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18 ல் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு செய்த 1,52,466 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பயிர் காப்பீடு, இழப்பீடு தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி 15.2.18 இல் தாலுகா அளவிலும், 26.2.18 இல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் , 22/23.6. 18 தேதிகளில் வாகன பிரசாரம் நடந்தது. 25.6. 18 இல் நடை பயணமாக வந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளிக்கப்பட்டது. 23.7.18 இல் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் மனு கொடுக்கப்பட்டது. 28.8. 18இல் தாலுகா தலைநகரங்களில் குடியேறும் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

இது நாள் வரை நிவாரணம் வழங்க எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று (நவ.22) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வி. மயில்வாகணன், தலைவர் எம்.முத்துராமு, துணை செயலாளர்கள் பி. கல்யாணசுந்தரம், ஆர். சேதுராமு, துணை தலைவர்கள் எஸ்.முருகேசன், டிநவநீத கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் எம்.ராஜ், ஆர்.மகாலிங்கம், கே.ராமநாதன், பி.பொன்னுச்சாமி, பி.பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!