கீழக்கரை கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு தொழிலாளர் சங்கம் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்கம் இணைந்து அனைவருக்கும் கொரோணா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும். தொழிலாளர் நல சங்கத்தை முடக்குவது கண்டித்தும் பொதுத்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து கீழக்கரை இந்து பஜார் மற்றும் முஸ்லிம் பஜார் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கருப்பசாமி, மகாலிங்கம், மாரியப்பன், வரகுண சேகரன், முகைதீன் அப்துல் காதர், முருகன், சுப்புராம், அழகர்சாமி, ராமு, கிருஷ்ணன், வெள்ளையன் பாண்டி, பட்டாணி, செல்வகுமார், யாசின், நூர் முஹம்மது, சதக்கத்துல்லாஹ், முகமது அலி, அப்துல் மஜித், சாதிக், ஹாஜா அலாவுதீன், முஹம்மது இபுராஹிம்,ஜகுபர், ஜலீல், அபுதாகிர், கபீர், முஹம்மது காசிம், புகாரி, ஹபிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு