Home செய்திகள் புதுமடத்தில் துணை மின் நிலையம் அமைக்கக் கோரி உச்சிப்புளி துணை மின் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்..

புதுமடத்தில் துணை மின் நிலையம் அமைக்கக் கோரி உச்சிப்புளி துணை மின் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மதுரை காமராஜர் பல்கலை., கீழ் இயங்கும் கடல் சார் கல்லூரி, கடலோர காவல் நிலையம், மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, பிஎஸ்என்எல் ., தனியார் செல்போன் கோபுரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு 6 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு உச்சிப்புளி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

புதுமடம் ஊராட்சியில் 1970ஆம் ஆண்டு நிறுவிய மின் கம்பங்களில் பொருத்திய மின் கம்பிகள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் பொருத்திய செப்பு கம்பிகள் இன்று வரை மாற்றப்படவில்லை. கடற்கரை கிராமம் என்பதால் காற்று அதிகரிப்பு காலங்களில் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. கோடை காலமான தற்போது, அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் தினமும் 8 மணி நேரம் கூட மின்சாரம் இருப்பதில்லை. மின் வெட்டு ஏற்பட்டால் 6 மணி நேரம் கழித்து தான் மீண்டும் மின் விநியோகம் கிடைக்கிறது. வீடுகளில் ஏற்படும் மின் பழுதை சரி செய்ய 6000 இணைப்புகளுக்கு ஒரே ஒரு மின் பணியாளர் உள்ளதால், மிகுந்த சிரமம் நிலவுகிறது. குறைந்த அழுத்த மின் விநியோகத் தால் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள மின் விளக்குகள் சிம்னி விளக்கு போல் வெளிச்சம் தருகிறது. மேலும் மின் சாதன பொருட்களை பயன்படுத்த இயலாத நிலை தொடர்கிறது.

இதனால், தடையில்லா மின்சாரம் பெற புதுமடத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கக்கோரி உச்சிப்புளி துணை மின் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுமடம் பொதுமக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.நிலோபர் கான் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செய்யது எம்.க வுஸ், புதுமடம் கரீம் மதீனா, பால்ச்சாமி, ஸ்ரீதர், விவசாய சங்க தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், சமூக ஆர்வலர் புதுமடம் அனீஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்கள் எழுப்பினர்.

பழைய மின் கம்பிகளை மாற்ற வேண்டும், கூடுதல் மின் பணியாளர் நியமிக்க வேண்டும், 100 கிலோ வோல்ட்ஸ் மின் திறன் கொண்ட 2 டிரான்ஸ்பார்மர் நிர்மாணிக்க வேண்டும், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், புதுமடம் தென் கடற்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தமிழக முதல்வர் தனிப்பிரிவு, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, தமிழக மின்வாரிய தலைவர் (சென்னை), ராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர், ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர், உச்சிப்புளி உதவி மின் செயற்பொறியாளர், ராமநாதபுரம் தாசில்தார், மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!