Home செய்திகள் மதுரை பெருங்குடியில்  டெங்கு காய்ச்சல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

மதுரை பெருங்குடியில்  டெங்கு காய்ச்சல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

by ஆசிரியர்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் டெங்கு நோய் தீவிர ஒழிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .

கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால்  ஏராளமான குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் சில மாணவர்கள் உள்ளிட்டோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேபோன்று  தனியார் மருத்துவமனைகளில் மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.  இதேபோன்று டெங்கு காய்ச்சல் பாதிப்புககுள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும்  நிலை ஏற்பட்டுவருகிறது.

மாவட்ட முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால்  மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரபடுத்த வேண்டும் எனவும், குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல்  பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யவும், டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெருங்குடி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டனர் வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் டெங்கு கொசு உற்பத்தி ஆகுவது ஆய்வு செய்து ப்ளீச்சிங் பவுடர் மற்றும் மருந்து ஆகியவை தெளித்தனர்

மேலும் காய்ச்சல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து நிலவேம்பு கசாயம் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com