கீழக்கரையில் வரும் 20-06-2017 (செவ்வாய் கிழமை) மீண்டும் மின் தடை…

கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகின்ற 20.06.17. (செவ்வாய் கிழமை) அன்று மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி மின்தடை அமுல்படுத்தி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் அவதி.

இது குறித்து மின் வாரியத்தை தொடர்பு கொண்டபோது, கீழக்கரை துணை நிலையத்தில் உள்ள இரு டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழது. பண்டிகை காலமாக இருப்பதால் பளு தாங்காமல் போக வாய்ப்புள்ளது. ஆகவே, பரமக்குடியில் இருந்து வரும் நபர்கள் டிரான்ஸ்பாமரை 2 மணி நேரத்திற்குள் மாற்றி மின்சப்ளை வரக்கூடும் என்றார்.

இப்பொழுது பொதுமக்கள் மனதில் எழும் ஒரு கேள்வி, மாதம் தோறும் பராமரிப்பு என கூறி ஒரு நாள் மின் தடை செய்வதின் அர்த்தம் என்ன?? அவ்வாறு முறையாக பராமரிப்பு செய்திருந்தால் எவ்வாறு பழுது ஏற்படும்?? சொல்லக்கூடிய காரணம் பொறுத்தமாக இல்லை..